Followers

Followers

Sunday, August 5, 2018

பொடுகை போக்க வீட்டிலேயே செய்யக் கூடிய குறிப்புகள்

பொடுகு பொதுவாக காணப்படும் ஒரு பிரச்சனையாகும், ஆனால் அதனை போக்க ஒரு தீர்வை கண்டறிவது அவ்வளவு எளிதானதல்ல. பொடுகை போக்க உங்களின் வழக்கமான தலைமுடி பராமரிப்பில் நீங்கள் மாற்றத்தை செய்ய வேண்டும் மற்றும் பொடுகு ஒழியும் வரையில் அதனை தொடர்ந்து பின்பற்றி வர வேண்டும். உங்களுக்கு உதவ இதோ ஒரு சில குறிப்புகள்...

சரியான ஷாம்பூவை பயன்படுத்துதல்

பொடுகை கையாள்வதற்கான முதல் கட்ட நடவடிக்கையே, நீங்கள் பயன்படுத்தி வரும் ஷாம்பூவை சோதிப்பதுதான். நாங்கள் பரிந்துரைப்பது க்ளியர் கம்ப்ளீட் ஆக்டிவ் கேர் ஆன்டி&டேண்டிரஃப் ஷாம்பூ. செயல்திறனுள்ள நியூட்ரியம் ஆயில் காம்ப்ளக்ஸ் ஃபார்முலேஷன் கொண்டுள்ள இது, தலையின் மேல்தோல் மற்றும் முடி பிளவுபடுவதில் இருந்து பாதுகாக்கிறது, அதோடு எண்ணெய்பசையை குறைக்கிறது.

எலுமிச்சை

எலுமிச்சை பழத்தில் பாதி வெட்டி எடுத்து அதன் சாற்றை உங்கள் தலையின் மேல்தோல் முழுவதும் தடவி முடியை ஈரப்படுத்தவும், சுமார் 5 நிமிடங்களுக்கு அப்படியே விடவும். அதன் பிறகு முடியை அலசவும். அடுத்த ஒரு சில மாதங்களுக்கு வாரத்துக்கு இரு தடவை என இதனை திரும்ப திரும்ப செய்து வரவும்.

வேம்பு

அரை கப் தண்ணீரில் 4 வேப்ப இலைகளை கொதிக்க விடவும். அதனை இரவில் அப்படியே வைத்து விடவும். அதன் பிறகு வேம்பு தண்ணீரால் உங்கள் தலைமுடியை அலசவும். இந்த செயலுக்கு பிறகு உங்களின் வழக்கமான ஷாம்பூவை நீங்கள் பயன்படுத்த முடியும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் என இதனை செய்து வரவும்.

Friday, August 3, 2018

புருவத்தை திரெட்டிங் செய்வது பற்றி நீங்கள் அறியாத தகவல்கள்! தெரிஞ்சுக்க இங்க படிங்க!

பெண்களுக்கு அடர்த்தியான முடி வளர்ப்பது, அதிலும் அதிக நீளமாக முடியை வளர்ப்பது என்றால் கொள்ளை பிரியம். முடிக்கு தரும் முக்கியத்துவத்தை மூன்று முடிச்சு போட்டவருக்கு கூட தருவதில்லை என்று பல கணவன்மார்கள் குற்றச்சாட்டு கொடுக்கும் அளவிற்கு பெண்களின் முடியின் மீதான மோகம் பெயர் பெற்றுள்ளது. பெண்களுக்கு முடிக்கு அடுத்த படியாக மிகவும் பிடித்த, அவர்கள் அதிக சிரத்தை எடுத்துக் கவனிக்கும் விஷயம் புருவம்.
Eyebrow threading unknown facts and tips in tamil.
அடர்த்தியான, வடிவான, அழகான புருவம் பெற வேண்டும் என்பது எல்லா பெண்களின் மனதிலும் இருக்கும் ஆசை. ஏனெனில், புருவம் சரியாக அமைந்து விட்டால் கண்ணின் அழகு அதிகரிக்கும். முகத்தில் கண் அழகாக இருந்தால் போதும், முக அழகே கூடி, முகம் ஒளி பெற்று திகழும். இத்தனை அழகினை அளிக்கக்கூடிய புருவங்களை, திரெட்டிங் முறையில் சீர்திருத்தி எளிதாக - அழகாக மாற்றுவது எப்படி மற்றும் அதில் ஒளிந்திருக்கும் நுணுக்கமான விஷயங்கள் குறித்து இந்த பதிப்பின் உள்ளே சென்று படித்தறிவோம் வாருங்கள்!

புருவ சீர்திருத்தம்

புருவ சீர்திருத்தம்

புருவத்தை சீர்படுத்தி ஒரு வடிவாக வளரச் செய்வது தான், இந்த புருவ சீர்திருத்த முறையின் முக்கிய நோக்கம். மேலும் இந்த புருவ சீர்திருத்த முறையில், அதிகமாக முடி வளர்ந்து, காடு போல் புருவத்தில் முடிகள் மண்டி முக அழகைக் கெடுப்பதை மாற்ற இந்த திரெட்டிங் முறை பெரிதும் உதவுகிறது. திரெட்டிங் முறையால் புருவங்களை வில் போன்று வளைத்து, புருவ முடிகளை சீராக வளரச் செய்து, நல்ல அழகிய வடிவத்தை பெறலாம்.
மீண்டும் மீண்டும்!

மீண்டும் மீண்டும்!

ஒருமுறை புருவத்தை த்ரெட்டிங் செய்து அழகு படுத்தினால், மீண்டும் மீண்டும் திரெட்டிங் செய்ய வேண்டுமா? என்ற கேள்வி பலரின் மனதில் இருக்கும் பொதுவான கேள்வியாகும். கண்டிப்பாக ஒருமுறை திரெட்டிங் செய்தால், முடி அதிகமாக வளரும் போதெல்லாம் மீண்டும் திரெட்டிங் செய்வது அவசியம்.
திரெட்டிங் செய்து முடியின் அடர்த்தி புருவத்தில் குறைந்து விட்டால், அந்த நேரத்தில் இரவு உறங்கச் செல்லும் முன் விளக்கெண்ணெயை புருவத்தில் தடவி விட்டு உறங்க வேண்டும். இது முடியின் அடர்த்தியை அதிகரிக்க உதவும். மேலும் புருவத்தினை நீர்ச்சத்து உள்ளதாக வைத்திருக்க வேண்டும்; அதாவது ஈரப்பதம் உள்ளதாக வைத்திருத்தல் அவசியம். அப்படி இருந்தால் தான் புருவத்தில் முடி கொட்டுதல் நிகழாமல், இருக்கும் முடிகள் அடர்த்தியுடன் அழகாக இருக்கும்.
முதல் முறை திரெட்டிங்!

முதல் முறை திரெட்டிங்! முதல் முறையாக திரெட்டிங் செய்பவர்களுக்கு வீக்கமும், வழியும் புருவத்தில் ஏற்படலாம்; அது ஓரிரு நாட்களுக்கு நீடிக்கலாம். இது முதல் தடவை செய்யும் போது மட்டுமே ஏற்படும்; பின்னர் புருவ சீர்திருத்தம் உடலுக்கு பழக்கமானதாக மாறிவிடும். திரெட்டிங் செய்ததால் ஏற்பட்ட வீக்கத்தைக் குறைக்க முதல் தினத்தன்று வைட்டமின் இ அடங்கிய எண்ணெயை கொண்டு மசாஜ் செய்யவும்; இரண்டாம் தினத்தில் பாதாம் எண்ணெயை பயன்படுத்தி மசாஜ் செய்யவும். மூன்றாம் மற்றும் நான்காம் நாட்களில், வெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை கொண்டு மசாஜ் செய்து வீக்கம் மற்றும் வலியை போக்கலாம். 

திரெட்டிங் செய்யும் முன் செய்ய வேண்டியவை: திரெட்டிங் செய்து கொள்ள போகும் முன் கண்களை சுற்றி எண்ணெயால் மசாஜ் செய்து, நன்கு கழுவி விட்டு பின் திரெட்டிங் செய்து கொள்ள வேண்டும்; இது திரெட்டிங் சேயும் போது புருவம் அழகிய வில் போன்ற வடிவம் பெற உதவுவதோடு, புருவம் அடர்த்தியாக வளரவும் வழிசெய்யும். மேலும் புருவத்தில் திரெட்டிங் செய்வதால், முகத்தசைகள் சுருங்கி முதுமை தோற்றம் ஏற்படலாம்; அதைத்தடுத்து இளமை ததும்பும் முகமாக வைத்திருக்க உதவும், இந்த எண்ணெய் மசாஜ். தேவையற்ற முடிகள்! முகத்தில் வளரும் தேவையற்ற முடிகள், புருவத்தை சுற்றி வளரும் முடிகள், புருவத்தை இணைக்கும் முடிகள் போன்றவற்றை எளிமையாக, எந்தவித ஷேவ் அல்லது கிரீமும் பயன்படுத்தாமல் அகற்ற சில அழகுக் குறிப்புகள் உதவுகின்றன. இம்மாதிரியான தேவையற்ற முடிகளை அகற்ற கஸ்தூரி மஞ்சள், கடலை மாவு, பால் இந்த மூன்றையும் சேர்த்து பேஸ்ட் போல ஆக்கி, அதை தேவையற்ற முடிகள் உள்ள இடத்தில் தடவி, அரை மணி நேரம் ஊற வைத்து கழுவி வந்தால், தேவையற்ற முடிகள் இயற்கையாக உதிர்ந்து, முகம் பளபளப்பாகும்.

தொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க மருத்துவ வழிகள்

1. நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.

2. கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (திரிபலா) இவைகளை பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில் குடித்தால் எடை குறையும். சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும்.

3. அருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.

4. ஆமணக்கின் வேரை இடித்து தேன் கலந்து நீரில் இரவு ஊற வைத்து காலையில் கசக்கிப் பிழிந்து, நீரை வடிகட்டி குடித்தால் உடல் பருமன் குறையும்.

5. பாதாம் பவுடரை எடுத்து சிறிது தேன் கலந்து காலையில் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

6. கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.

7. வெள்ளரி, நெல்லி, கோஸ், கொத்தமல்லி, முருங்கை, திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, பப்பாளி, அன்னாசி, எலுமிச்சை, கொய்யா, புதினா, வெங்காயம், தர்பூசணி, பேரிக்காய், கறிவேப்பிலை, வாழைத்தண்டு இவைகளை சாறு எடுத்து குடிக்க உடல் எடை குறையும்.

8. கரிசலாங்கண்ணி இலையை, பாசி பருப்புடன் சேர்த்து சமைத்து தினமும் சாப்பிட உடல் எடை குறையும். சோம்பு எடுத்து சுத்தம் செய்து தண்ணீர்விட்டு காய்ச்சி அடிக்கடி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

9. ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்மளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.