Followers

Followers

Showing posts with label உடல் ஆரோக்கியம் எடை குறைப்பு. Show all posts
Showing posts with label உடல் ஆரோக்கியம் எடை குறைப்பு. Show all posts

Monday, September 10, 2018

பத்தே நாட்களில் எடையை குறைக்க வேண்டுமா? அப்ப வாட்டர் டயட் ஃபாலோ பண்ணுங்க...

உடல் எடையை விரைவில் குறைக்க வேண்டுமென்ற ஆசை இருந்தால், அதனை ஆரோக்கியமான முறையில் குறைக்க முயலுங்கள். ஒருவர் உயிர் வாழ உணவில்லாமல் கூட இருந்துவிட முடியும், ஆனால் தண்ணீர் இல்லாமல் உயிர் வாழ்வதென்பது கடினம். ஏனெனில் உடலுக்கு நீர்ச்சத்தானது மிகவும் இன்றியமையாதது. எனவே அத்தகைய நீர்ச்சத்துள்ள உணவுப் பொருட்களை 10 நாட்கள் உட்கொண்டு வந்தால், நிச்சயம் உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் மற்றும் நச்சுக்கள் வெளியேறி, உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

சரி, இப்போது 10 நாட்கள் பின்பற்ற வேண்டிய அந்த வாட்டர் டயட் பற்றிப் பார்ப்போமா!!!

டே 1: தண்ணீர்

டே 1: தண்ணீர்

வாட்டர் டயட்டின் முதல் நாள் வெறும் தண்ணீர் மட்டும் பருக வேண்டும். அதிலும் நாள் முழுவதும் இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் குடித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
டே 2: க்ரீன் டீ

டே 2: க்ரீன் டீ

இரண்டாம் நாள் க்ரீன் டீயை பருக வேண்டும். அத்துடன் இதனால் உடலில் உள்ள நச்சுக்களானது வெளியேற ஆரம்பிக்கும்.
டே 3: ஐஸ் தண்ணீர்

டே 3: ஐஸ் தண்ணீர்

அதைத் தொடர்ந்து மூன்றாம் நாள் ஐஸ் தண்ணீரைப் பருக வேண்டும். இதன் மூலம் உடலில் உள்ள மெட்டபாலிசமானது அதிகரிக்கும்.
டே 4: வெல்லம் கலந்த நீர்

டே 4: வெல்லம் கலந்த நீர்

நான்காம் நாள் 5 லிட்டர் தண்ணீரைப் பருக வேண்டும். அதுவும் அந்த நீரில் 2 டேபிள் ஸ்பூன் வெல்லத்தைச் சேர்த்து கலந்து பருக வேண்டும். இதனால் உடலின் எனர்ஜியானது அதிகரிக்க ஆரம்பிக்கும்.
டே 5: சூப்

டே 5: சூப்

ஐந்தாம் நாளில் புரோட்டீன் மற்றும் வைட்டமின்களை உடலில் சேர்க்க வேண்டும். அதற்கு ஐந்தாம் நாளன்று நான்கு முறை ஒரு கப் உங்களுக்கு பிடித்த சூப்பை குடிக்க வேண்டும். அது அசைவ சூப்பாக கூட இருக்கலாம்.
டே 6: ஜூஸ்

டே 6: ஜூஸ்

ஆறாம் நாள் வெறும் பழங்களால் செய்யப்பட்ட பிரஷ் ஜூஸ்களை குடித்து வர வேண்டும்.
டே 7: இனிப்பு தண்ணீர்

டே 7: இனிப்பு தண்ணீர்

10 நாள் வாட்டர் டயட்டின் ஏழாம் நாளன்று குடிக்கும் நீரில் 1 சிட்டிகை சர்க்கரை மற்றும் 1 சிட்டிகை உப்பு சேர்த்து குடித்து வர வேண்டும். இதனால் எடை குறைவதுடன், உடலின் இரத்த அழுத்தமானது சீராக இருக்கும்.
டே 8: சுடுநீர்

டே 8: சுடுநீர்

எட்டாம் நாளன்று சுடுநீரை குடித்து வந்தால், உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைய ஆரம்பித்து, செல்லுலைட்டின் அளவையும் குறைக்கும்.
டே 9: மூலிகை நீர்

டே 9: மூலிகை நீர்

பொதுவாக மூலிகை நீரைப் பருகினால், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேறிவிடும். ஏனெனில் மூலிகைகளுக்கு அத்தகைய சக்தியானது உள்ளது. எனவே ஒன்பதாம் நாளன்று மூலிகையால் செய்யப்பட்ட டீயை பருகி வாருங்கள்.
டே 10: எலுமிச்சை ஜூஸ்

டே 10: எலுமிச்சை ஜூஸ்

எடையை குறைப்பதில் எலுமிச்சை ஜூஸ் மிகவும் சிறந்த பானம். எனவே அத்தகைய எலுமிச்சை ஜூஸை பத்தாம் நாளன்று தேன் மற்றும் 1 சிட்டிகை பட்டைத் தூள் சேர்த்து குடித்து வர வேண்டும்.
குறிப்பு
மேற்கூறியவாறு பின்பற்ற முடியாவிட்டால், ஒவ்வொரு நாளும் அவ்வப்போது பழங்களை எடுத்து வாருங்கள்.

Friday, August 3, 2018

தொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க மருத்துவ வழிகள்

1. நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.

2. கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (திரிபலா) இவைகளை பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில் குடித்தால் எடை குறையும். சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும்.

3. அருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.

4. ஆமணக்கின் வேரை இடித்து தேன் கலந்து நீரில் இரவு ஊற வைத்து காலையில் கசக்கிப் பிழிந்து, நீரை வடிகட்டி குடித்தால் உடல் பருமன் குறையும்.

5. பாதாம் பவுடரை எடுத்து சிறிது தேன் கலந்து காலையில் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

6. கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.

7. வெள்ளரி, நெல்லி, கோஸ், கொத்தமல்லி, முருங்கை, திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, பப்பாளி, அன்னாசி, எலுமிச்சை, கொய்யா, புதினா, வெங்காயம், தர்பூசணி, பேரிக்காய், கறிவேப்பிலை, வாழைத்தண்டு இவைகளை சாறு எடுத்து குடிக்க உடல் எடை குறையும்.

8. கரிசலாங்கண்ணி இலையை, பாசி பருப்புடன் சேர்த்து சமைத்து தினமும் சாப்பிட உடல் எடை குறையும். சோம்பு எடுத்து சுத்தம் செய்து தண்ணீர்விட்டு காய்ச்சி அடிக்கடி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

9. ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்மளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.