பெண்களுக்கு அடர்த்தியான முடி வளர்ப்பது, அதிலும் அதிக நீளமாக முடியை வளர்ப்பது என்றால் கொள்ளை பிரியம். முடிக்கு தரும் முக்கியத்துவத்தை மூன்று முடிச்சு போட்டவருக்கு கூட தருவதில்லை என்று பல கணவன்மார்கள் குற்றச்சாட்டு கொடுக்கும் அளவிற்கு பெண்களின் முடியின் மீதான மோகம் பெயர் பெற்றுள்ளது. பெண்களுக்கு முடிக்கு அடுத்த படியாக மிகவும் பிடித்த, அவர்கள் அதிக சிரத்தை எடுத்துக் கவனிக்கும் விஷயம் புருவம்.
அடர்த்தியான, வடிவான, அழகான புருவம் பெற வேண்டும் என்பது எல்லா பெண்களின் மனதிலும் இருக்கும் ஆசை. ஏனெனில், புருவம் சரியாக அமைந்து விட்டால் கண்ணின் அழகு அதிகரிக்கும். முகத்தில் கண் அழகாக இருந்தால் போதும், முக அழகே கூடி, முகம் ஒளி பெற்று திகழும். இத்தனை அழகினை அளிக்கக்கூடிய புருவங்களை, திரெட்டிங் முறையில் சீர்திருத்தி எளிதாக - அழகாக மாற்றுவது எப்படி மற்றும் அதில் ஒளிந்திருக்கும் நுணுக்கமான விஷயங்கள் குறித்து இந்த பதிப்பின் உள்ளே சென்று படித்தறிவோம் வாருங்கள்!
புருவ சீர்திருத்தம்
புருவத்தை சீர்படுத்தி ஒரு வடிவாக வளரச் செய்வது தான், இந்த புருவ சீர்திருத்த முறையின் முக்கிய நோக்கம். மேலும் இந்த புருவ சீர்திருத்த முறையில், அதிகமாக முடி வளர்ந்து, காடு போல் புருவத்தில் முடிகள் மண்டி முக அழகைக் கெடுப்பதை மாற்ற இந்த திரெட்டிங் முறை பெரிதும் உதவுகிறது. திரெட்டிங் முறையால் புருவங்களை வில் போன்று வளைத்து, புருவ முடிகளை சீராக வளரச் செய்து, நல்ல அழகிய வடிவத்தை பெறலாம்.
மீண்டும் மீண்டும்!
ஒருமுறை புருவத்தை த்ரெட்டிங் செய்து அழகு படுத்தினால், மீண்டும் மீண்டும் திரெட்டிங் செய்ய வேண்டுமா? என்ற கேள்வி பலரின் மனதில் இருக்கும் பொதுவான கேள்வியாகும். கண்டிப்பாக ஒருமுறை திரெட்டிங் செய்தால், முடி அதிகமாக வளரும் போதெல்லாம் மீண்டும் திரெட்டிங் செய்வது அவசியம்.
திரெட்டிங் செய்து முடியின் அடர்த்தி புருவத்தில் குறைந்து விட்டால், அந்த நேரத்தில் இரவு உறங்கச் செல்லும் முன் விளக்கெண்ணெயை புருவத்தில் தடவி விட்டு உறங்க வேண்டும். இது முடியின் அடர்த்தியை அதிகரிக்க உதவும். மேலும் புருவத்தினை நீர்ச்சத்து உள்ளதாக வைத்திருக்க வேண்டும்; அதாவது ஈரப்பதம் உள்ளதாக வைத்திருத்தல் அவசியம். அப்படி இருந்தால் தான் புருவத்தில் முடி கொட்டுதல் நிகழாமல், இருக்கும் முடிகள் அடர்த்தியுடன் அழகாக இருக்கும்.
No comments:
Post a Comment